உதகை தாவரவியல் பூங்காவில் நடப்பாண்டில் - இயற்கை உரம் 3 டன் உற்பத்தி செய்ய இலக்கு :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் உதகை அரசுதாவரவியல் பூங்காவின் மேல்பகுதியில் இயற்கை உரம் தயாரிக்கும் வகையில், கடந்தாண்டு கால்நடைகளை வளர்க்க கொட்டகை அமைக்கப்பட்டு, 2 பசுக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கழிவுகளை உரமாக்கமேற்கூரையுடன் கூடிய 3 தரைத்தொட்டிகள் கட்டப்பட்டன. மாடுகளில் இருந்து கிடைக்கும் சாணம், பூங்காவில் சேகரிக்கப்படும் இலை தழைகளை சேகரித்து தொட்டியில் நிரப்பப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இங்கு உற்பத்திசெய்யப்படும் இயற்கை உரத்தைவிவசாயிகள் மட்டுமின்றி, பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து தோட்டக்கலை அதிகாரிகள் கூறியதாவது: தாவரவியல் பூங்காவில் நடப்பாண்டில் 3 டன் உரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஒரு டன் வரை இயற்கை உரத்தை உற்பத்தி செய்து, விற்பனை செய்துள்ளோம். பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் போன்றவற்றுக்காக இயற்கை உரத்தை வாங்கிச் செல்கின்றனர்.

ஒரு கிலோ உரம் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பூங்காவில் கோடை சீசன், 2-வதுசீசனுக்காக விதைப்புப் பணிகள்,நாற்றுகள், செடிகள் பராமரிப்புபோன்ற பணிகளுக்கு இயற்கைஉரம் பயன்படுத்தப்படுகிறது. உதகையில் நிலவும் சீதோஷ்ண காலநிலையால் இயற்கை உரம் தயாரிக்க இரண்டரை மாதங்கள் ஆகின்றன. எனவே இயற்கை உரம் தேவைப்படும் விவசாயிகள் முன்கூட்டியே தெரிவித்தால், உற்பத்தி செய்து தரப்படும், என்றனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்