விழுப்புரத்தில் தீபாவளியை யொட்டி புத்தாடைகள், பட்டாசு களை வாங்க நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
விழுப்புரம் நகரை பொறுத் தவரை ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள் நிறைந்த நேருஜி சாலை, எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதி, கே.கே.ரோடு திரு.வி.க. சாலை, திருச்சி மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மக்கள் கூட்டம், கூட்டமாக சென்று தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர். இதனால் விழுப்புரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது.போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய கூடுதலாக போக்குவரத்து போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருப்பினும் நேற்று காலை முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல் திண்டிவனம், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திருவெண்ணெய் நல்லூர், வானூர், கோட்டக்குப்பம், மயிலம் உள்பட மாவட்டம் முழுவ தும் நேற்று கடைவீதிகளில் தீபாவளிக்கு தேவையான பொருட் களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago