கடலூர் மாவட்டத்தில் - பூக்கள் விலை உயர்வு :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் கிலோ ரூ.600க்கு விற்ற குண்டுமல்லி நேற்று கிலோ ரூ.1,000-க்கு விற் பனை செய்யப்பட்டது. ரூ.40க்கு விற்ற கோழிக்கொண்டை கிலோ ரூ.60-க்கும், ரூ.40-க்கு விற்ற சம்பங்கி கிலோ ரூ.60க்கும், ரூ.200க்கு விற்ற பட்டன் ரோஸ்கிலோ ரூ.400க்கும், ரூ.60க்கு விற்ற சாமந்தி கிலோ ரூ.150க்கும், ரூ.40க்கு விற்ற அரளி கிலோரூ.50க்கும் விற்பனை செய்யப்பட் டது. பூ விலை உயர்ந்து காணப் பட்டாலும் பூக்கடைகள் மற்றும் பூமார்க்கெட்டுகளிலும் பொது மக்கன் கூட்டம் அதிகமாகஇருந்தது.

இது குறித்து பண்ருட்டி பூ வியாபாரிகள் கூறுகையில், "கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரோஸ், சம்பங்கி ஆகியவையும் செம்மேடு,கிழக்கு மருதூர், தட்டாம் பாளையம், தராசு பகுதிகளிலிருந்து அரும்பு, மல்லிகை, சம்பங்கி, கோழிக்கொண்டை, கேந்தி, கனகாம்பரம் ஆகியவற்றை மார்க் கெட்டுக்கு பூவை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வருகின் றனர். தற்போது தீபாவளி பண்டிகை நாள் மற்றும் வரத்து குறைவால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்