ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதுகலை வணிகவியல் நிறுமச் செயலாண்மைத் துறை படிப்புக்கு நவ.8 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. தகுதி யுள்ளோர் விண்ணப்பிக் கலாம்.
ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் (2021-22) புதிதாக முதுகலை வணிகவியல் நிறுமச் செயலாண்மைத் துறை (எம்.காம் கார்ப்பரேட் செக்ரெடேரியஷிப்) படிப்பு தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்பாடப் பிரிவுக்கு நவம்பர் 8-ம் தேதி முதல் மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள மாணவிகள் விண்ணப்பங்களை கல்லூரியில் பெற்று தகுந்த ஆவணங்களுடன் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் எம்.சுமதி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago