திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பரிசுப்பொருட்களை ஆட்சியர் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் லதா முன்னிலை வகித்தார். அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர். சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டு 15 நாட்களுக்குள் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த கரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சலவை இயந்திரம், தங்கக்காசு, மொபைல் போன், பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை வழங்கி திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் பேசியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 17,30,600. இதில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 12,28,965 பேர். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 4,79,802 பேர். திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பேசினார்.
கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட வன அலுவலர் பிரபு, பயிற்சி ஆட்சியர் பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago