காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு :

By செய்திப்பிரிவு

காவேரிப்பட்டணம் சுற்றுவட்டார மக்களுக்கு குடிநீருக்கான முக்கிய ஆதாரமாக உள்ளது தென்பெண்ணையாறு. ஆனால் காவேரிப்பட்டணம் தென்பெண்ணையாற்று கரையோரங்களில் இப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.தற்போது மழைகாலம் என்பதால் குப்பைகள் மழைநீருடன் கலந்து ஆற்றில் கலந்து வருகிறது. குறிப்பாக காவேரிப்பட்டணம் சுடுகாடு அருகேயுள்ள ஆற்றங்கரையோரத்தில் குப்பைகள் மலைபோல தேங்கி கிடக்கின்றன. இதனால் நீர் மாசடைந்து வருவதுடன், நோய்கள் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, பேரூராட்சி மற்றும் ஆற்றின் அருகே உள்ள ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக அகற்றாமல் சிலர், தென்பெண்ணை ஆற்றில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். தேங்கியுள்ள குப்பைகளில் சிலர் தீ வைத்துச் செல்வதால், சுற்றுச் சூழல், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால், ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழைநீருடன் கலந்து குப்பை கழிவுகள் ஆற்றில் கலப்பதால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்புடைய பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் ஆற்றில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்