கிருஷ்ணகிரி அடுத்த பெரியமுத்தூரில் நெல்லில் வயல் விழா கொண்டாட்டப்பட்டது.
கிருஷ்ணகிரி அடுத்த பெரியமுத்தூர் பகுதியில் அட்மா திட்டத்தின் கீழ் 'நெல்லில் வயல் விழா' கொண்டாடப்பட்டது. வேளாண் இணை இயக்குநர் ராஜேந்திரன் தலைமை வகித்து, நெல்லில் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்த கையேட்டினை விவசாயிகளுக்கு வழங்கினார்.
கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முருகன், நெல்லில் விவசாயி பின்பற்றிய தொழில்நுட்பங்கள் விதைப்பின் போது விதை நேர்த்தி, பின்னர் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை முறைகள் குறித்தும் கூடுதல் மகசூல் பெற்ற விவசாயியின் வயலை பார்வையிட்டார்.
எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மைய வல்லுநர் ரமேஷ்பாபு, நெல்லில் பின்பற்ற வேண்டிய சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், கால்நடைகளின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கம் அளித்தார். வேளாண்மை அலுவலர் பிரியா, நுண்ணூட்ட உரமிட வேண்டியதன் அவசியத்தையும், அவை வேளாண்துறையில், 50 சதவீதம் மானியத்தில் கிடைப்பதையும் எடுத்துரைத்தார்.
இவ்விழாவில், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சண்முகம், பார்வதி ஆகியோர் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago