கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் - பட்டாசு விபத்து தீப்புண் காய அவசர சிகிச்சை பிரிவு :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பட்டாசு தீப்புண் காய அவசர சிகிச்சை பிரிவு, 10 படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகைக் காலத்தில் அனைத்து வணிகப் பகுதிகளிலும் கூட்டமாக மக்கள் கூடுவ தால் கட்டாயம் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். குழந்தைகள் பட்டாசு, மத்தாப்பு வெடிக்கும்போது பெற்றோர் உடனிருந்து தீக்காயம் ஏற்படாதவாறு கவனித்துக் கொள்ள வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது நைலான், பாலியஸ்டர் போன்ற துணிவகைகளை தவிர்ப்பது நல்லது. ஆடைகள் தரையில்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மத்தாப்புகளை பயன்பாட்டுக்குப் பிறகு தண்ணீர் வாளியில் போட்டு அணைத்து அப்புறப்படுத்த வேண்டும், சானிடைசர் தடவிக்கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டாம். பொதுமக்கள் அனை வரும் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும்.

தவறுதலாக பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்டால், உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு வந்து உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள ஏதுவாக சிறப்பு தீப்புண் காயப்பகுதி அவசரசிகிச்சைப் பிரிவில், 10 படுக்கை வசதிகளுடன் தேவையான மருந்து பொருட்களும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள், 24 மணி நேரம் தயார்நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 94999 66133 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE