திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூன்று வகுப்பறை கட்டிடம் உள்ளிட்டவற்றை நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.88.07 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் 3 வகுப்பறை கட்டிடம், அறிவியல் ஆய்வக கட்டிடம் மற்றும் நூலக கட்டிடம் ஆகியவை கட்டப்பட்டன. இந்த கட்டிடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
இதையொட்டி, பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, வகுப்பறை கட்டிடத்தை பார்வையிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago