திருந்தி வாழ்ந்துவரும் 14 பேருக்கு தஞ்சை எஸ்.பி கடனுதவி ஆணை வழங்கல் :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் குற்றச் செயல்களிலிருந்து விடுபட்டு, திருந்தி வாழ்ந்துவரும் 14 பேருக்கு கடனுதவிக்கான ஆணையை எஸ்.பி ரவளிப்ரியா நேற்று வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு, தற்போது திருந்தி வாழும் நபர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொருட்டு, அவர்கள் சுயதொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் விதமாக அவர்களுக்கு மறுவாழ்வு முகாம் நிகழ்ச்சி கடந்த செப்.19-ம் தேதி நடைபெற்றது. இதில் 150 பேர் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் தொழில் தொடங்க, மாவட்ட தொழில் மையம் மூலம் கடனுதவி கேட்டு விண்ணப்பித்தனர். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வி.சகுந்தலா, முன்னோடி வங்கி மேலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் விண்ணப்பங்களை பரிசீலித்தனர். இதையடுத்து, முதற்கட்டமாக நேற்று தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 14 பேருக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் கடனுதவிக்கான ஆணையை எஸ்.பி ரவளிப்ரியா வழங்கினார். இந்நிகழ்வில், தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் மணிவேல் மற்றும் வங்கி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்