தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. ஏரல் வட்டத்தில் உள்ள கடம்பா குளம் நிரம்பி உபரிநீர் அதிகளவில் வெளியேறியதால், பாதிப்புகள் ஏற்பட்டன. மழை பாதிப்புகளை தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஏரல் வட்டத்தில் உள்ள தண்ணீர்பந்தல் பாலம், உப்பனூர், டி.சி.டபிள்யுபகுதிகள், வெள்ளக்கோயில் - கடம்பாகுளம் வடிகால்பகுதி, சேதுவாய்க்கால் - குரும்பூர் பாலம் மற்றும் சாலை பகுதி,குரும்பூர்- அங்கமங்கலம் பாலம் பகுதிகளில் பாதிப்புகளை பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் கூறும்போது, “ கடம்பா மறுகாலில் உபரிநீர் அதிகளவு வெளியேறியதால் பல்வேறு கிராம பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடம்பா மறுகாலில்ஆக்கிரமிப்புகள் மற்றும் அமலைச் செடிகளை அகற்றவும் விவசாயிகள்கோரிக்கை வைத்துள்ளனர். கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பழனிவேலாயுதம் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago