அரக்கோணம் முதல் வேலூர் கன்டோன்மென்ட் வரை - சாதாரண பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் : பள்ளி மாணவர்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

அரக்கோணம் முதல் வேலூர் கன்டோன்மென்ட் வரையிலான சாதாரண பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் மனு அளித் துள்ளனர்.

அரக்கோணத்தில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்துக்கு சாதாரண பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. மிகக்குறைந்த கட்ட ணத்தில் இயக்கப்படும் இந்த ரயிலில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகம் பேர் பயணம் செய்து வந்தனர். கரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. இதில், அரக்கோணம் முதல் வேலூர் கன்டோன்மென்ட் இடையிலான சாதாரண பயணிகள் ரயில் மட்டும் இதுவரை இயக்கப்படவில்லை.

இதற்கிடையில், கடந்த செப் டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள், இந்த ரயில் இல்லாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, அரக்கோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ராணிப்பேட்டை பெல் ராம கிருஷ்ணா உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் பேருந்துகள் மூலம் வந்து செல்ல கால தாமதம் ஆவதுடன் நீண்ட தொலைவு பயணத்தால் உடல் சோர்வு ஏற்படுவதாக கூறுகின்றனர்.

எனவே, நிறுத்தப்பட்டுள்ள அரக்கோணம் கன்டோன்மென்ட் இடையிலான பயணிகள் ரயில் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என கோரி வருகின்றனர். இதன்மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து வேலூரில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர் களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் முகுந்தராயபுரம் ரயில் நிலைய மேலாளரிடம் நேற்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், நிறுத்தப்பட்ட ரயில் சேவையை பள்ளிக்கு வந்து செல்ல வசதியாக மீண்டும் தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்