பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரசின் விதிகளை பின்பற்றி திறந்தவெளியில் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். தீப்பற்றக்கூடிய ஆடை களை அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டாம்.
குழந்தைகள், சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும்போது பெற்றோர் உடனிருக்க வேண்டும். குளிர்ந்த நீர் மற்றும் மணலை அருகே வைத்துக் கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும். சுவாசக் கோளாறு இருப்பவர்கள் பட்டாசு வெடிக்கும் காலத்தில் வெளியே செல்வதை தவிர்க்கவும். கால்களில் காலணி அணிந்துகொண்டு பட்டாசுகளை வெடிக்கவும். பட்டாசுகளை வெடித்த பிறகு, கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
வெடிக்காத பட்டாசுகளை கைகளில் எடுக்காமல், அதன்மீது தண்ணீரை ஊற்றி அணைக்க வேண்டும். மின் கம்பம், பெட்ரோல் பங்க், எரிவாயு நிலையம், கூரை வீடு மற்றும் எளிதில் தீப் பிடிக்கக்கூடிய பொருட்கள் உள்ள இடத்தில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக பட்டாசு வெடிக்கக் கூடாது” என கேட்டுக்கொண்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago