வேளாண் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் 3% வட்டி சலுகையுடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் விரிவான திட்ட அறிக்கையை agriinfra.dac.gov.in என்ற இணையளதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் தொடர் சங்கிலி சேவைகள் வழங்குதல், சேமிப்பு கிடங்குகள், சேமிப்பு குதிர், சிப்பம் கட்டும் அறைகள், தரம் பிரிக்கும் அலகுகள், குளிர்பதன சங்கிலிகள், தளவாட வசதிகள், முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள், பழுக்க வைக்கும் கூடங்கள் உள்ளிட்ட தொழில் சார்ந்தவர்கள் பயன்பெறலாம்.
அதேபோல், மாவட்டத்தில் புதிதாக எண்ணெய் செக்கு அலகு அமைக்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் தயாரிக்கும் சிறு நிறுவனங்களுக்கு 35% மானியத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும் புவோர் இயந்திரங்களின் ஜி.எஸ்.டி விலைப்புள்ளிகளுடன் திட்ட அறிக்கையை தயார் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு வேளாண் துணை இயக்குநர் (வணிகம்) 9751016200, வேளாண் அலுவலர் (வணிகம்) 7598102824 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago