கோடநாடு வழக்கில் கைதான - ரமேஷூக்கு மேலும் 5 நாட்கள் போலீஸ் காவல் :

By செய்திப்பிரிவு

கோடநாடு வழக்கில் கைது செய்யப்பட்ட ரமேஷை மேலும் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உதகை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில்மறுவிசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் 45-க்கும் மேற்பட்டோர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். கோடநாடு வழக்கில் திடீர் திருப்பமாக, சேலத்தில் மர்மமானமுறையில் விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலையும், நண்பர் ரமேஷையும் கடந்த மாதம் 25-ம் தேதி சேலத்தில் போலீஸார் கைது செய்து, நீலகிரி மாவட்டம் கூடலூர் சிறையில் அடைத்தனர்.

பின்னர், 28-ம் தேதி மாவட்ட நீதிமன்றத்தில் தனபாலை ஆஜர்படுத்தி, 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் மேலும் 5 நாட்கள் போலீஸ் காவல் நீட்டிப்பு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 29-ம் தேதி ரமேஷை, போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். அவரது போலீஸ் காவல் நேற்று முடிவடைந்ததை அடுத்து, உதகை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி தரன் முன்பு ரமேஷை, போலீஸார் ஆஜர்படுத்தினர். மேலும், 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு போலீஸார் கேட்டனர். நீதிபதி தரன், 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்