தீபாவளி பண்டிகையை முன் னிட்டு ஆம்னிபேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், சிவகுமார், வெங்கடேசன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், முருகவேல், சுந்தர ராஜ், விஜயகுமார், கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று முன் தினம் நள்ளிரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஆய்வு செய்தனர்.
சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக தென் மாவட்டங்கள் மற்றும் கோவை சென்ற ஆம்னி பேருந்துகளில் பயணித்த பயணி களிடம் செலுத்தப்பட்ட கட்டணம் குறித்து அப்போது அவர்கள் கேட்டறிந்தனர்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு வாகன தணிக்கை குழுக் கள் மூலம் வருகிற 10-ம் தேதி வரை இதுபோன்ற திடீர் ஆய்வில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மற்றும் அரசுக்கு சாலை வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால் பறி முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த புகார்களை 1800 425 6151 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு புகார் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago