சென்னை, சௌகார்பேட்டையைச் சேர்ந்தவர் தீபக் தயால் சோனி (43). இவர் நேற்று முன்தினம் மாலை திண்டிவனம் ரயில் நிலையத்தில் உள்ள 3 வது நடைமேடை யில் நின்று கொண்டிருந்தார். அப்பொது ரயிலில் தடை செய்யப்பட்ட பட்டாசு மற்றும் வெடிபொருட்கள் கொண்டு செல்லப்படு கிறதா என்று ரயில்வே போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தீபக் தயால் சோனியின் பையை சோதனை செய்தபோது, அதில் 1.061 கிலோ எடைகொண்ட 51 தங்க நகைகள்இருப்பது தெரிய வந்தது. நகைக் கான உரிய ஆவணங்களை கேட்ட போது தீபக் தயால் சோனியால் கொடுக்க முடியவில்லை. இத னைத் தொடர்ந்து விழுப்புரம் வணிகவரித்துறை அலுவலர் பாரி முன்பு நகைகளோடு தீபக் தயால்சோனியை ஆஜர் செய்தனர். பின்னர் ஜிஎஸ்டி செலுத்தாததால் நகையின் மதிப்பான ரூ.47,43,251க்கு அபராதமாக ரூ.2,84,596 ஐ செலுத்த உத்தரவிடப்பட்டது. உரிய ஆவணங்களோடு, அவர் அத்தொகையை செலுத்தி யதும் தீபக் தயால் சோனி நகை களோடு விடுவிக்கப்பட்டார் .
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago