திண்டுக்கல்லில் உள்ள தூத்துக்குடி டி.எஸ்.பி.யின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று காலை முதல் இரவு வரை சோதனை நடத்தி னர். இதில் ஆவணங்கள் கைப் பற்றப்பட்டதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் சின் னாளபட்டியைச் சேர்ந்தவர் ஜெய ராமன். எஸ்.ஐ. யாக பணியில் சேர்ந்த இவர் பதவி உயர்வு பெற்று தற்போது தூத்துக்குடி மாவட்டக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ஆக உள்ளார்.
இவரது வீடு திண்டுக்கல் அசோக் நகரில் உள்ளது. இவர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்துள்ளதாக புகார் வந்ததன்பேரில் திண்டுக்கல் லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி. நாகராஜன் தலைமை யில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர ராஜன், கீதாரூபாராணி மற்றும் போலீஸார் நேற்று காலை ஜெயராமன் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
காலையில் தொடங்கிய சோதனை நேற்றிரவு 7 மணிக்குப் பின்னரும் தொடர்ந்தது. வீட்டுக் குள் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வெளியே வராமல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட தாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago