புதிய குடிநீர் இணைப்புக்கு கூடுதலாக பணம் வசூல் : மானாமதுரையில் அதிமுக கவுன்சிலர் புகார்

By செய்திப்பிரிவு

புதிய குடிநீர் இணைப்புகளுக்கு கூடுதலாக பணம் கேட்பதாக மானாமதுரை ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் புகார் தெரிவித்தார்.

மானாமதுரை ஒன்றியக் குழுக் கூட்டம், தலைவர் லதா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் முத்துசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரஜினிதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் ருக்மணி பேசியதாவது:

ராஜகம்பீரம் ஊராட்சியில் புதிய குடிநீர் இணைப்புகளுக்கு டெபாசிட் தொகையைவிட கூடுதலாக பணம் கேட்கின்றனர். எனது வீட்டுக்குக்கூட புதிய குடிநீர் இணைப்பு கொடுக்க மறுக்கின்றனர். இது குறித்து பிடிஓவிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் இதுபோன்று நடந்தது கிடையாது, என்றார்.

திமுக கவுன்சிலர் அண்ணாதுரை பேசியதாவது: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறக் கூடாது. கூட்டத்தின் மரபுகளை மீறிப் பேசும் உறுப்பினர்கள் மீது உரிமைமீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கவுன்சிலர் ருக்மணி பேசுகையில், ‘அடுத்த கூட்டத்துக்கு வரும்போது ஆதாரத்துடன், பாதிக்கப்பட்டோரையும் அழைத்து வருகிறேன்,’ என்றார்.

துணைத் தலைவர் முத்துச்சாமி பேசுகையில், குடிநீர் இணைப்பு வழங்க டெபாசிட்டாக ரூ.2 ஆயிரம் மட்டுமே ஊராட்சி நிர்வாகம் பெற்றது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்