இல்லம் தேடி கல்வித் திட்ட பயிற்சி :

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்ட மாவட்டக் கருத்தாளர் களுக்கு முதற்கட்ட ஒருநாள் பயிற்சி டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.திருஞானம் முன்னிலை வகித்தார்.

இப்பயிற்சியை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கூடுதல் மாநிலத் திட்ட இயக்குநர் எஸ்.நாகராஜ முருகன் தொடங்கிவைத்துப் பேசிய தாவது: இல்லம் தேடி கல்வித் திட்டம் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் பணியாற்ற 7,540 தன்னார்வலர்கள் விண்ணப்பித்துள்ளனர். தினமும் மாலை 1 மணி நேரம் முதல் 1.30 மணி நேரம் வரை பயிற்சி அளிப்பர். இவ்வாறு அவர் பேசினார்.

ஆசிரியப் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி, மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர் கணேசன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இப்பயிற்சியில், மாவட்டக்குழு உறுப்பினர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்