தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு நிலுவைத்தொகை வழங்க வேண்டும் : மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்

By செய்திப்பிரிவு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு கூடுதல் தொகையை வழங்க வேண்டும் என மத்திய கிராமப்புற மேம்பாடு மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு நேற்று சு.வெங்கடேசன் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டம் நாடு முழுவதும் நிதியின்றி தவிக்கிறது. 21 மாநிலங்களில் மத்திய அரசு அனுப்பிய நிதி தீர்ந்து விட்டது. சுமார் 15 கோடி மக்களுக்கு பசி தீர்க்கும் திட்டம். கோவிட் ஊரடங்கு காலத்தில் வாழ வழியின்றி சொந்த கிராமங்களுக்கு திரும்பியவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம். ஏற்கெனவே இத் திட்டத்துக்கு ஒதுக்கும் பட்ஜெட் தொகை போதுமானதாக இல்லை. கடந்தாண்டு ரூ.1.11 லட்சம் கோடி செலவான நிலையில் நடப்பாண்டு பட்ஜெட்டில் ரூ.73 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

இத்திட்டத்துக்கு நிதியை வழங்கக்கோரி தமிழக முதல்வரும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தந்த ரூ.3524.69 கோடி கடந்த செப்.15-ல் தீர்ந்து விட்டது. அதன்பின் நவ. 1 வரை மேற்கொண்ட பணிகளுக்கான செலவினம் ரூ.1178.42 கோடி தேவைப்படுகிறது. நடப்பு நிதியாண்டு முடிய 5 மாதங்கள் உள்ளன. எனவே, நிதித்தேவையை மறு கணக்கீடு செய்து கூடுதல் தொகைகளை உடன் அனுப்பி வைக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்