மதுரை டோக் பெருமாட்டிக் கல்லூரி நாட்டுநலப்பணி திட்டம் மற்றும் மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை இணைந்து “ஸ்வச் சர்வேஷன் கிராமீன் 2021” தூய்மை பணியாளர்கள் கணக்கெடுப்பு இயக்கம் கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானாசிங் வழிகாட்டுதலில் ஏற்பாடு செய்யப்பட்டது.
கிராமப்புற தூய்மை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்ட இந்நிகழ்வுக்கு உதவிப் பேராசிரியர் சாண்டோ மிக் செலின் சங்கீதா, பிரெஞ்ச் துறை வேண்டல் செய்தார். பகுதி ஐந்தின் ஒருங்கிணைப்பாளர் அனிதா செல்வராஜ் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார். அபிதா ஹினிப் , உமாமகேஸ்வரி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் பாலமுருகன் தூய்மை கணக்கெடுப்பு நோக்கம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். 22 பேராசிரியர்கள், 252 மாணவர்கள் பங்கேற்றனர்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மகாலட்சுமி, கலைவாணி, ஜேனட் ஜீவா, ஆனந்தி, பிரிஸ்சில்லா, கோப்பெருந்தேவி, தீபா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பகுதி ஐந்தின் ஒருங்கிணைப்பாளர்கள் அனிதா செல்வராஜ், சுஜாதா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago