விருதுநகர் ராஜலட்சுமி திரையரங்கு அருகிலுள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில், ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி முன்னிலையில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மலர்கள் மற்றும் இனிப்பு வழங்கி உற்சாகப்படுத்தினார். மேலும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணியும் படியும், தங்களது பெற்றோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
விருதுநகர் மாவட்டத்தில் 992 அரசு பள்ளிகள், 492 அரசு உதவிபெறும் பள்ளிகள், 197 சுயநிதி / மெட்ரிக் பள்ளிகள், 36 சி.பி.எஸ்.இ,ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் என மொத்தம் 1,717 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் உடல்நிலை குறித்து கண்காணிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதால் முதல்வரின் வழிகாட்டுதல்படி அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago