மதுரை மாவட்டத்தில் 20 மாதங் களுக்குப் பிறகு பள்ளிகளுக்கு வந்த மாணவர்களை அமைச்சர், எம்.பி. ஆட்சியர் ஆகியோர் வர வேற்றனர்.
தமிழகத்தில் கரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டன. மாணவர்கள் கல்வி பாதிக்கப் படாமல் இருப்பதற்காக ஆன்லைன் கல்வி, கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசு பொதுத் தேர்வுகள் நடத்தா மலேயே 10, பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.
தற்போது கரோனா பரவல் படிப்படியாகக் கட்டுப்படுத்தப்பட்டு வருவதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று தமிழக அரசும் நவ.1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தது. அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டன.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் திருமால்புரம் தொடக்கப் பள்ளியில் அமைச்சர் பி.மூர்த்தி மாணவர்களுக்கு இனிப்பு, பூக் கள் கொடுத்து வரவேற்றார். அப்போது மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆரப்பாளையம் வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவி யரை சு.வெங்கடேசன் எம்பி இனிப்பு, பூ கொடுத்து வரவேற்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago