மதுரை நகரில் கடந்த 30-ம் தேதி கோரிப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த அரசு பேருந்து மீது ஏறி, தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க வந்த 30-க்கும் மேற் பட்ட இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். இது தொடர்பாக தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வாடிப்பட்டியைச் சேர்ந்த அஜித்குமார், சமயநல்லூர் சுராஜ்குமார், அன்பரசு உள்ளிட் டோரைக் கைது செய்தனர்.
தேவர் ஜெயந்தி விழாவின் போது மதுரை நகரில் பல இடங்களில் இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தியதாக 150 பேருக்கு இ-சலான் மூலம் அபராதம் விதித்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல், அதிக ஒலி எழுப்பியதாக 112 இரு சக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.
இவற்றின் மூலம் ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago