கிருஷ்ணகிரியில் மாணவர்களுக்கு மலர் கொடுத்து ஆட்சியர் வரவேற்பு :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப் பட்டதும், ஆட்சியர், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு மலர்கள் கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

தமிழகம் முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப் பட்டன. கிருஷ்ணகிரி ஒன்றி யத்தில், மொத்தமுள்ள 124 தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் வேலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஜெய சந்திரபானு ரெட்டி, பர்கூர் எம்எல்ஏ மதியழகன் ஆகியோர் பள்ளிக்கு வந்த மாணவர் களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதில், சிஇஓ., மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி தொடக்கப் பள்ளியில் வாழைமரங்கள், தோரணங்கள், கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது. பள்ளியில் மாணவர்களுக்கு பூங்கொத்து, இனிப்பு கொடுத்தும், புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் வேதா, தலைமை ஆசிரியர் சேகர், கட்டிகானப்பள்ளி ஊராட்சித் தலைவர் காயத்ரி தேவி கோவிந்தராஜ், மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண் டனர்.

மாணவர்களுக்கு இனிப்பு

ஓசூர் கல்வி மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஓசூர் ஆர்.வி. அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் காமராஜ் காலனி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடை பெற்ற தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வில் ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும், இனிப்பு வழங்கியும் உற்சாக மாக வரவேற்றார்.

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய தமிழ் தொடக்கப் பள்ளிக்கு வருகை தந்த மாணவ மாணவிகளுக்கு பூங்கொத்து, இனிப்பு மற்றும் பாட புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கி தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் வரவேற்றார்.

ஓசூர் பேடரப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி, மத்திகிரி தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்