தூத்துக்குடி மாவட்டத்தில் 14,84,428 வாக்காளர்கள் : வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டார். அதன்படி மாவட்டத்தில் 14,84,428 வாக்காளர்கள் உள்ளனர்.

01.01.2022 தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் பணி நடைபெறவுள்ளது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

வரைவு பட்டியலில் 7,25,339 ஆண்கள், 7,58,946 பெண்கள், 143 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14,84,428 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,611 ஆக உயர்ந்துள்ளது. 01.01.2022-ல் 18 வயது பூர்த்தியாகும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரிமாற்றம், திருத்தம் போன்றவைகளுக்கு நவம்பர் 30-ம் தேதி வரை மனு அளிக்கலாம். இதற்காக 13.11.2021, 14.11.2021, 27.11.2021 மற்றும் 28.11.2021 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2022-ல் வெளியிடப்படும்.

இந்த பணிக்காக மாவட்டத்தில் 1,611 வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 889 நியமன அலுவலர்கள் பள்ளி, கல்லூரிகளில் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்களது பணிகளை கண்காணிக்க 156 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக பெயர் சேர்த்தல் (படிவம் 6), பெயர் நீக்கம் (படிவம் 7), திருத்தங்களை மேற்கொள்ளுதல் (படிவம் 8), தொகுதிக்குள் முகவரி மாற்றம் (படிவம் 8ஏ), வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பெயர் சேர்க்க (படிவம் 6) போன்றவைகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த படிவங்களை www.nvsp.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பம் செய்யலாம் என்றார் ஆட்சியர்.

சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்காளர் விவரம்:தொகுதி ஆண்கள் பெண்கள் இதரர்மொத்தம்விளாத்திகுளம் 1,05,309 1,10,065 8 2,15,382தூத்துக்குடி 1,39,651 1,46,228 55 2,85,934திருச்செந்தூர் 1,17,137 1,24,433 19 2,41,589வைகுண்டம் 1,10,478 1,13,963 4 2,24,445ஓட்டப்பிடாரம் 1,22,826 1,28,335 29 2,51,190கோவில்பட்டி 1,29,938 1,35,922 28 2,65,888

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்