ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்: ஆட்சியரிடம் மனு :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாரநாதா பீச் ரோடு பழைய கடற்கரை மீனவ சங்கத் தலைவர் ஜெகன், ராஜீவ் காந்தி நகர் மீனவர் நல பாதுகாப்பு சங்கத் தலைவர் நிகோலஸ், திரேஸ்புரம் அலை ஓசை சங்கு குளிப்பவர் முன்னேற்ற சங்கத் தலைவர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜிடம் அளிக்கப்பட்ட மனு விவரம்:

கடந்த 30 ஆண்டுகளாக எங்களின் குழந்தைகளுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் கல்வி உதவித்தொகை வழங்கி வந்தது. மேலும்,இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தந்தது. ஆலைமூடப்பட்டுள்ளதால் கடந்த மூன்றரை ஆண்டுகளாக இந்த உதவிகள் கிடைக்கவில்லை. எங்களது வாழ்வாதாரம் மேம்பட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல சாமிநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், “ எங்கள் கிராமத்தில் ரூ.30 லட்சம் செலவில் குளத்தை தூர்வாரி நீர்மட்டம் உயர ஸ்டெர்லைட் நிர்வாகம் உதவியது. பெண்களை தொழில்முனைவோராக மாற்ற நாப்கின் உற்பத்தி மையம் தொடங்கியுள்ளனர். அதன் மூலம் 25 பெண்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) செயலாளர் எஸ்.அப்பாத்துரை தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் அளித்த மனுவில், “தூத்துக்குடி அருகேயுள்ள கோஸ்டல் என்ஜென் தனியார் அனல்மின் நிலையத்தில் கார்டின் எனும் நிறுவனம் மூலம் பணியாற்றி வரும் 30 காவலாளிகளுக்கு கடந்த ஜூன் மாதம்முதல் ஊதியம் வழங்கப்படவில்லை. தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. இதேபோல் 2 தனியார் ஒப்பந்த நிறுவனங்களில் பணியாற்றிய 60 பேருக்கு ஊதியம், தீபாவளி போனஸ் வழங்காமல் வேலையில் இருந்து நிறுத்தியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்