ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளி யிடப்பட்டன.
தமிழகத்தில் 1-1-2022 நாளை தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்கத் திருத்த பணிக் கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமார வேல் பாண்டியன் பட்டியலை வெளியிட்டார்.
தொடர் சுருக்கமுறை காலத்தில் புதிதாக 10 ஆயிரத்து 900 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு மற்றும் இருமுறை பதிவு மாறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக 5,583 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள் ளனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளி யிட்டார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் நேற்று மாலை வெளியிட்டார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட, திருவண் ணாமலை கோட்டாட்சியர் வெற்றி வேல் பெற்றுக் கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி மற்றும் அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.இதில், 5,244 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு மற்றும் இருமுறை பதிவு காரணங்களுக்காக 5,486 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர்கள் பட்டியலை அந்தந்த கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
01-01-22-ம் தேதியை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தம் வரும் 30-ம்தேதி வரை நடைபெற உள்ளது.
01-01-22-ம் தேதியன்று 18 வயது நிறைவு பெறுபவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கலாம். மேலும், இடமாற்றம், பிழைத் திருத்தம், பெயர் நீக்கம் செய்யவும் விண்ணப்பிக்கலாம். இதற்காக வரும் 13, 14, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கம் செய்யவும் மற்றும் திருத்தம் செய்யவும் www.voterportal.eci.gov.in மற்றும் www.nvsp.in என்ற இணையதளம் மற்றும் Voter Helpline என்ற செல்போன் செயலியை பயன்படுத்தலாம்.
பெறப்படும் படிவங்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வரும் ஜனவரி 5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
வேலூர் மாவட்டம்தொகுதிஆண்கள்பெண்கள்மூன்றாம் பாலினத் தவர்கள்மொத்தம்காட்பாடி1,20,3131,28,911342,49,258வேலூர்1,21,4781,31,024262,52,528அணைக்கட்டு1,24,3681,32,182392,56,589கே.வி.குப்பம் (தனி)1,10,8391,15,58472,26,430குடியாத்தம் (தனி)1,41,0031,50,699422,91,644 மொத்தம்6,18,0016,58,30014812,76,449
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago