உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 7 பேர் கைது :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம்அருகே வேளாண் துறைக்கு சொந்த மாக உள்ள இடத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதனை மீட்க கோரியும் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் முன் நேற்று காலைமுதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள்தொடங்கினர். அத்திக்கடவு அவிநாசி திட்ட போராட்டக்குழுஒருங்கிணைப்பாளர் எம்.வேலுசாமிதலைமையில், அனுமன்சேனாமாநில செயலாளர் தியாகராஜன் உட்பட 7 பேர் பங்கேற்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே வேளாண் துறைக்கு சொந்தமான 16 சென்ட் நிலத்தில்3 சென்ட் அளவுக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 சென்ட்நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதை மீட்டு, வேளாண் துறை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நிலத்தைஆக்கிரமித்துள்ளவர்கள் தற்போது புதிய ஆவணங்களை உருவாக்கி விட்டனர். பழைய ஆவணப்படி நிலத்தை மீட்கவேண்டும்’’ என்றனர். அவிநாசி போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னும் விவசாயிகள் கலைந்து செல்ல மறுத்ததால், 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்