காஞ்சிபுரம் சுற்றுப்புற பகுதிகளில் - வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது : 42 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட மூவரைக் கைது செய்த தனிப்படை போலீஸார், அவர்களிடமிருந்து ரூ.8.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரம் நகரப்பகுதி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாலையில் செல்லும் நபர்களை மறித்து வழிப்பறியில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தன. இதனால், இந்த சம்பவங்களில் ஈடுபடும் நபர்களைப் பிடிப்பதற்காகவும், வழிப்பறி சம்பவங்களைத் தடுப்பதற்காகவும் மாவட்ட எஸ்பி சுதாகர் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, காஞ்சிபுரம் டிஎஸ்பி முருகன் மேற்பார்வையில் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ராஜகோபாலன் தலைமையிலான தனிப்படை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதில், வழிப்பறி சம்வங்களில் ஈடுபட்டதாக ஏனாத்தூர் பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு(40), பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்த காளிதாஸ்(27), முருகன்(23) ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், அவர்களிடமிருந்து ரூ.8.50 லட்சம் மதிப்பிலான 42 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்