விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் - மத்திய அரசு திட்ட பணிகளை தரத்துடன் விரைந்து முடித்திடுக : மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் மேற் கொள்ளப்படும் மத்திய அரசு திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று அமைச்சர் மஸ்தான் தலைமையில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கி ணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கி ணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் விழுப்புரம் மக்களவை உறுப்பினர் து.ரவிக்குமார் முன்னிலையில் நடை பெற்ற இந்த கண்காணிப்புக் குழுக்கூட்டத்தில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, கல்வித் துறை, வேளாண் துறை, சமூக நலத்துறை, மகளிர் திட்டம் மற்றும் இதர துறைகளில் மத்திய அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஜல் ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், பாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாடு திட்டம், தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார இயக்கம், ஒருங்கிணைப்பட்ட மின் மேம்பாட்டுத் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய நுண்ணீர் பாசனத் திட்டம், தேசிய வேளாண்மை சந்தை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் கற்பிப்போம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் போன்ற திட்ட பணிகளில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து நலத்திட்ட பணிகளை யும் சிறப்பான முறையில் மேற் கொள்ளவும், நல்ல தரத்துடன் மேற்கொண்டு பணிகளை விரைந்துமுடித்திட வேண்டும் என ரவிக் குமார் கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்டஆட்சியர் த.மோகன், ஒருங்கி ணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் துணைத்தலைவர் மற்றும் ஆரணி மக்களவை எம்.கே.விஷ்ணுபிரசாத், எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி,ரா.லட்சுமணன், ச.சிவக்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.ஸ்ரீநாதா மற்றும் அனைத்துத் துறை அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்