சேத்தியாத்தோப்பு அருகே முரட்டு வாய்க்காலை முழுமையாக தூர்வாரப்பட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில் உள்ள வெள்ளாறு வடக்கு ராஜன் வாய்க்காலில் இருந்து முரட்டு வாய்க்கால் பிரிந்து புவனவகிரி பகுதி சி.ஆலம்பாடி, பூ.மணவெளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக செல்கிறது. இந்த வாய்க்கால் சுமார் இருபது கிலோமீட்டர் நீளம் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெருகிறது. இந்நிலையில் பொதுப்பணித்துறை சார்பில் வாய்க் காலை தூர்வாராமல் ஆகாயத் தாமரையை மட்டும் அகற்றி செல் கின்றனர்.
வாய்க்கால் முழுவதும் முட்புதர்கள், கோரைகள், செடிகள், மண் மேடுகள் என்று தூர்ந்து போய் இருப்பதால் பாசனத்துக்கு தண்ணீர் போதிய அளவுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளது. வாய்க்காலில் அதிக அளவில் தண்ணீர் வந்தால் அந்த தண்ணீர் அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த வாய்க்கால் முழுவதும் தூர் வாரினால் தான் தண்ணீர் தங்கு தடையின்றி பாசனத்து செல்லும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாய்க்கால் முழுவதும் தூர் வாரி கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இப்பகுதி விவசாயிகள் உள்ளனர்.
தூர்வாராமல் ஆகாயத் தாமரையை மட்டும் அகற்றி செல்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago