மத்திய அரசின் அறிவியல் திட்ட - கல்வி உதவித்தொகைக்கான தேர்வு தமிழில் நடத்த பரிசீலனை : மதுரை எம்.பி.க்கு மத்திய அமைச்சர் பதில்

By செய்திப்பிரிவு

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் எனும் திட்டத்தின் கீழ் அறிவியல் முனைப்புள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ.80 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் வரை வழங்குகிறது. இதற்கான ஆன்லைன் திறனறித் தேர்வு 2 மொழிகளில் மட்டுமே நடத்தப்படுகிறது.

இத்தேர்வை மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று கோரியிருந்தேன். தமிழ்நாட்டில் கூடுதல் தேர்வு மையங்களை அமைப்பதோடு, விண்ணப்பக் கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு கடந்த ஆக.25-ம் தேதி கடிதம் எழுதியிருந்தேன்

அதற்கு மத்திய அமைச்சர் பதில் அளித்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இக்கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டது எனவும், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அரசின் நிலையை வாக்குமூலமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்