விருதுநகரில் உள்ள பட்டாசுக் கடைகளில் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி திடீர் ஆய்வு செய்து சரவெடிகளை பறிமுதல் செய்தார்.
பேரியம் பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கக் கூடாது என்றும், சரவெ டிகள் தயாரிக்கவும் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அதையடுத்து, விருதுநகரில் உள்ள பட்டாசுக் கடைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி ஆய்வு மேற்கொண்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த சரவெடிகளை பறிமுதல் செய்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் 29-ம் தேதி வெளியிட்ட தீர்ப்பில், சாதாரண வகை பட்டாசுகளின் பயன்பாட்டுக்கு எந்தவிதமான தடையுமில்லை எனவும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பேரியம் உப்பு கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது வெடிக்கவோ தடை விதித்து ஆணையிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் உள்ள பட்டாசுக் கடைகளில் வட்டாட்சியர்கள், கோட்டாட்சி யர்கள் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் பல கடைகளில் சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப் பிரமணியன், வட்டாட்சியர் செந்தில் வேல் மற்றும் அலுவலர்கள் உடனி ருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago