காளையார்கோவில் அருகே சேறும் சகதியுமாக மாறிய சாலை : வெளியேற முடியாமல் முடங்கிய கிராம மக்கள்

By செய்திப்பிரிவு

காளையார் கோவில் அருகே கிராம சாலை சேறும் சகதியுமாக மாறியதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சாத்தரன்கோட்டை-சூராணம் நெடுஞ்சாலையில் இருந்து கோடியக்கரை வழியாக கிராம்புளி செல்லும் சாலை 3.5 கி.மீ. தூரத்துக்கு பிரதமர் கிராமச் சாலைத்திட்டத்தில் ரூ.2.98 கோடியில் அமைக்கப்படுகிறது. கடந்த பிப்.25-ம் தேதி தொடங்கிய இச்சாலை பணி 8 மாதங்களாகியும் முடி வடையவில்லை. ஆங்காங்கே பாலப்பணிகள் மட்டும் நடந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது. அவ்வழியாக யாரும் செல்ல முடியாததால் கிராம மக்கள் வெளியேற முடியாமல் முடங்கினர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், சாலை மோசமாக இருப்பதால் விவசாயப் பணிகளுக்கு வாகனங்களில் பொருட்களை எடுத்துச் செல்ல முடியவில்லை. உடனடியாக சாலைப் பணிகளை முடிக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்