விடுமுறை தினமான நேற்று - ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் :

ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றங்கரையில் அமைந் துள்ள சுற்றுலாத் தலமாகும். பயணிகளை கவர்ந்த இங்கு வழக்கமான நாட்களில் குறைந்த எண்ணிக்கையிலும், வார இறுதி நாட்கள், விழாக்கால விடுமுறை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் அதிக அளவில் பயணிகள் வந்து செல்வர்.

இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி, கேரள, கர்நாடக, ஆந்திர உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பயணிகள் வந்து பரிசலில் சென்றுகாவிரியாற்றின் அழகையும், அருவியில் குளித்தும் மகிழ்வர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லுக்கு வழக்கத்தை விட பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக அருவி மற்றும் ஆற்றில் குளிக்க தடை நீடிக்கும் நிலையில், குறிப்பிட்ட வழித்தடங்களில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால், பயணிகள் பெரும்பாலானவர்கள் பரிசல்கள் மூலம் பயணித்து காவிரியாற்றின் அழகை ரசித்து மகிழ்ந்தனர். பயணிகள் வருகை அதிகரிப்பால்,

அங்குள்ள சாலையோரக் கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் வர்த்தக சுழற்சி வழக்கத்தை விட அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதையொட்டி, போலீஸார், ஊர்க்காவல் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆபத்தான பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்