ஈரோடு நந்தா தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா :

ஈரோடு நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த 10-வது பட்டமளிப்பு விழாவில், 426 மாணவ-மாணவியர் பட்டம் பெற்றனர்.

ஈரோடு நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் 10-வது பட்டமளிப்பு விழா,  நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமையில் நடந்தது.  நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி, நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் ஆறுமுகம், நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் இயக்குநர் முனைவர் செந்தில்ஜெயவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், 2019-2020-ம் கல்வியாண்டில் இளங்கலை பிரிவில் மின்னணு மற்றும் தொடர்பியல் துறையில் படித்த 80 மாணவர்கள், கணினி மற்றும் அறிவியல் துறையில் படித்த 73 மாணவ, மாணவிகள், இயந்திரவியல் துறையில் படித்த 100 மாணவ,மாணவிகள், கட்டிடவியல் துறையில் படித்த 52 மாணவர்கள் மற்றும் முதுகலை பிரிவில் மேலாண்மை துறையில் படித்த 30 மாணவ, மாணவிகள் என மொத்தம் 426 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2018-2019-ம் கல்வி ஆண்டில் படித்து முடித்தவர் களுக்கும் இவ்விழாவில் பட்டமளிக்கப்பட்டது. 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்