நீதிமன்றம் அனுமதித்துள்ள நேரத்தில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் : தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ள நேரத்தில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கேட்டுக்கொண் டுள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பசுமை பட்டாசுகளை பொதுமக்கள் வெடிக்க வேண்டும்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பாது நமது கடமை. குறைந்த ஒலி, குறைந்தளவில் காற்றை மாசுப்படுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

அதிக ஒலியை எழுப்பி தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சர வெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்கள் அருகே பட்டாசு வெடிக்க வேண்டாம்.

உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ள நேரத்தில் பட்டாசுகளை வெடித்து, மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்