வேப்பனப்பள்ளியில் கலைநிகழ்ச்சி மூலம் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு :

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று முழு ஊரடங்கின்போது 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்புகளை குறைக்கும் வகையில், ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தேன்கனிகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, உனிசெட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் கலைக் குழுவினர் மூலம் கரகாட்டம், நாடகம் மூலம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

வேப்பனப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி பங்கேற்று பேசினார். மேலும், பள்ளி நேரங்களை தவிர இதர நேரங்களில் மாணவர்களின் குடியிருப்புக்கு அருகே தன்னார்வலர்களின் பங்கேற்புடன் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பு வழங்குதல், கற்றல் திறனை வலுப்படுத்துதல், தினமும் குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் எளிய முறையில் கற்றல் வாய்ப்பை வழங்குதல், அன்றாட கற்றல் செயல்பாடுகளில் படிப்படியாக பங்கேற்கச் செய்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE