தீபாவளி பண்டிகைக்கு தரமான முறையில் இனிப்பு வகைகளை தயாரிக்க உத்தரவு :

தீபாவளி பண்டிகையின்போது இனிப்பு பலகாரங்கள் தயாரிப்பவர்கள் தரமான முறையில் தயாரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது பண்டிகைக் காலம் தொடங்கி உள்ளதால், அனைத்து விதமான விற்பனைகளும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரங்கள் மற்றும் கேக் போன்றவற்றை பொதுமக்கள் விரும்பி வாங்கி உண்பதும், உறவினர்களுக்கு அளிப்பதும் நமது கலாச்சாரமாக விளங்கி வருகிறது.

எனவே, இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்களைத் தயாரிப்பவர்கள் தரமான மூலப் பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். இனிப்புகளை தயாரிக்கும்போது கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது.

பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும்.

பண்டிகைக் காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தங்களது வணிகத்தைப் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.

அதேபோல், தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு தீபாவளி சீட்டுநடத்துபவர்களும் என்றஇணையதள முகவரியில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம்செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களும் பலகாரங்களை கடையில் வாங்கும்போது உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும், இது தொடர்பான புகார்களை மாவட்ட நியமன அலுவலர், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, உணவு பாதுகாப்பு பிரிவு, 2-ம் தளம், மாவட்டஆட்சியர் வளாகம், திருவள்ளூர்-602001 (தொலைபேசி எண்.044-27662002) என்ற முகவரியிலும், 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE