கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நேற்று 2,488 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடததப்பட்டன.
தமிழகம் முழுவதும் நேற்று 7 -வது மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 1,130 இடங்களில் இந்த தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.
கண்டம்பாக்கம், மரகதபுரம் கிராமங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களை ஆட்சியர் மோகன் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியது:
விழுப்புரம் மாவட்டத்தில் ஏழாவது கட்டமாக நேற்று 1,130 சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. 1 லட்சம் பேருக்கு போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இந்த முகாம்கள் நடத்தப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் இது வரை நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண் டுள்ளனர்.
முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் உரியகால தவணையில் இரண்டாம்கட்ட தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் முற்றிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளா தவர்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றார். அப்போது சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்கொடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று917 மையங்களில் இந்த தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. கடலூர்அருகே உள்ள பெரியகங்கணாங் குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் நாணமேடுஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளளி ஆகிய இடங்களில் நடை பெற்ற முகாம்களில் கடலூர் சட்ட மன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பேசிய ஆட்சியர், “கடலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 6 கட்டங்களாக நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம்களில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 1 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
தற்போது ஒரு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது” என்றார். அப்போது கடலூர் துணை இயக்குநர் (சுகாதாரம்) மருத்துவர் மீரா, மாவட்ட மலேரியா அலுவலர் மருத்துவர்.கெஜபதி, வட்டாட்சியர் பலராமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அசோக்பாபு,சக்தி மற்றும் அரசு அலுவலர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 441 மையங்களில் நேற்று 7-ம் கட்டமாக தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.
9 ஒன்றியங்கள் வாரியாக 50 கிராமங்களில் நடை பெற்ற இம்முகாம்களில் நேற்று 12 மணி வரை 14,565 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முகாம் களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பி.என்.தர், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், அரசின் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago