விழுப்புரம் ஜானகிபுரத்தில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் நடத்திய சோதனையில், கடந்த 3 நாட்களில் வசூலான கணக்கில் வராத ரூ.31,680 மற்றும் டாஸ்மாக் கடையில் இல்லாமல் சட்டவிரோதமாக தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.6 லட்சத்து 47 ஆயிரத்து 180 மதிப்புள்ள 7 ஆயிரம் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களான பார்த்தசாரதி, அய்யப்பன், விற்பனையாளர்கள் நாராயணன், முருகன் ஆகிய 4 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago