எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் : அரசு ஊழியர் சங்க தலைவர் வலியுறுத்தல்

எங்கள் கோரிக்கைகளை தேர்தல் நேரத்தில் அறிவித்தபடி அரசு நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் வலியுறுத்தி யுள்ளார்.

தருமபுரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 13-வது மாவட்ட மாநாடு நடந்தது. மாநாட்டில், புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாநாட்டுக்கு பின்னர், சங்க மாநிலத் தலைவர் அன்பரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆட்சியின்போது அரசு ஊழியர்களின் பல உரிமைகள் பறிக்கப்பட்டன. இதை மையமாக வைத்து தருமபுரியில் அப்போது அரசு ஊழியர் சங்க பிரதிநிதித்துவ பேரவை மாநாடு நடத்தப்பட்டது. மேலும், மதுரையில் போராட்ட ஆயத்த மாநாடு நடந்தது. இதில், அன்றைய எதிர்க்கட்சித் தலை வரும், இன்றைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார்.

அப்போது, “அரசு ஊழியர்களின் பறிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் திமுக தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் வழங்கப் படும். தற்காலிக பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளும் கைவிடப்படும். நம்பிக்கையுடன் இருங்கள்” என்றார்.

ஆனால், திமுக தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர் நடந்த முதல் பட்ஜெட் கூட்டத்திலேயே அரசு ஊழியர்களின் நம்பிக்கை பொய்த்துப்போனது. வரும் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடக்க உள்ள மாநாட்டில் முதல்வர் பங்கேற்கவுள்ளார்.

கடந்த சட்டப் பேரவை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்று வார் என்ற நம்பிக்கையுடன் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து வருகிறோம். நிறைவேற்றா விட்டால், போராட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகி றோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE