வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை: விண்ணப்பிக்க அழைப்பு :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5-ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதே போல் பதிவு செய்து ஓராண்டு காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி மற்றும் பிளஸ் 2 மற்றும் டிகிரி படித்தவர்கள் தகுதியுடையவர்கள்.

இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள், http://tnvelaivaaippu.in அல்லது www.tnvelaivaaippu.gov.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்ப படிவத்தில் பக்க எண்.7-ல் உள்ள வருவாய் துறை சான்றில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரின் கையொப்பம் பெற்று,பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்துடன் தேசிய மையமாக்கப்பட்ட வங்கியில் தங்களுக்கென தனியாக வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, கல்விச்சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் வந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்