தூத்துக்குடி மாநகரப் பகுதியில்இனிப்பு கடைகளில் ஆய்வு :

By செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு மற்றும் கார பண்டங்களின் தரத்தை உறுதி செய்யும் வகையில்,இக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வுசெய்தனர். தூத்துக்குடி மாவட்டஉணவு பாதுகாப்புத் துறை நியமனஅலுவலர் ச.மாரியப்பன் தலைமையில், உணவுபாதுகாப்பு அலுவலர்கள்சக்திமுருகன், ஜோதிபாசு, சிவக்குமார், காளிமுத்து, மாரியப்பன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மாநகரப் பகுதிகளில் 12 இனிப்பகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உணவு பாதுகாப்பு உரிமமின்றி இயங்கிய ஒரு இனிப்பகத்தை தற்காலிகமாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். நிரந்தர மற்றும்தீபாவளி நேர தற்காலிக இனிப்பு கடைகள் நடத்துவோர், இணைய தளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்புத் துறையின் சான்றிதழ் பெற்று தொழில் நடத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

பொதுமக்கள் இனிப்பு மற்றும் கார வகைகளை உரிய காலாவதி தேதிபார்த்து வாங்க வேண்டும். அவற்றின் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் குறைபாடுகள் குறித்தும், ஸ்வீட் ஸ்டால்களின் விதிமீறல்கள், உரிமமின்றி செயல்படும் கடைகள் குறித்தும், 94440 42322 என்ற மாநில வாட்ஸ்அப் எண்ணுக்கு புகார் அளிக்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE