திருப்பத்தூர் மாவட்டத்தில் நவம்பர் மாதம் 3 மற்றும் 5-ம் தேதிகளில் பட்டா பெயர் மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களிடம் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இதில், பட்டா பெயர் மாறுதல், திருத்தம் செய்துகொள்ளலாம். இதன்மூலம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்துக்குள் அனைத்து கிராம மக்களும் பயன் பெறலாம்.
அதன்படி, நவம்பர் 3-ம் தேதி கந்திலி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, கொண்டகிந்த னப்பள்ளி சமுதாய கூடம், வெலதிகமணிபெண்டா ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, வடபுதுப்பட்டு பஞ்சாயத்து அலுவலகங்களிலும், வரும் நவம்பர் 5-ம் தேதி நரியநேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, வேட்டப்பட்டு சந்தன் வட்டம் மகளிர் குழு கட்டிடம், அலசந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, மேல்சாணாங்குப்பம் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் முகாம் நடைபெற உள்ளது’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago