நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம்,தெப்பகாடு மற்றும் கார்குடி கிராமங்களில் உள்ள அரசு உண்டு உறைவிடப்பள்ளில் குழந்தை பாதுகாப்புவிழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.தமிழக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதிரங்கசாமி தலைமை வகித்தார்.கூட்டத்துக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் சமூக நலத்துறை அரசாணைப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆறு வகையான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட வேண்டும். இத்தகைய குழுக்களை வலுப்படுத்த தமிழ்நாடு குழந்தைகள்உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்களை வலுப்படுத்தினால் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க இயலும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள், பள்ளிகள், அங்கன் வாடி மையங்கள் சிலவற்றையும்ஆய்வு செய்ய ஆணையம் திட்டமிட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இல்லாத மாவட்டமாகவும், குழந்தைகள் குற்ற செய்கைகளில் ஈடுபடாத மாவட்டமாகவும் நீலகிரி திகழ தேவையான நடவடிக்கைகளை ஆணையம் மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் வீ.ராமராஜ், மல்லிகை செல்வராஜ், ஐசிடிஎஸ் திட்ட அலுவலர் தேவகுமாரி உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago