நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: நீலகிரிமாவட்டத்தில் உள்ள அனைத்து அங்காடிகள், பேரங்காடிகள், குடியிருப்புகள், பொது இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, உதகை நகரப் பகுதிகளில் 210 இடங்களில் 608 கேமராக்களை பொருத்துவதாககடை உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர். இதில் 178 இடங்களில்350 கேமராக்களை கடை உரிமையாளர்கள் பொருத்தியுள்ளனர். எஞ்சியுள்ள பகுதிகளிலும்அடுத்த 2 வாரத்துக்குள் கேமராக்களை பொருத்தி விடுவதாக கடைஉரிமையாளர்கள் உறுதி அளித்துள்ளனர். குற்றங்களைத் தடுக்கும் வகையில் அங்காடிகள், பேரங்காடிகள், குடியிருப்புகள், பொது இடங்கள் என சுமார் 350 கண்காணிப்புக் கேமராக் கள் பொருத்தப்பட்டுள்ளன. இது வரவேற்கத்தக்கது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த பொதுமக்கள், அங்காடி உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறுஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago