கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - 11 பட்டாசு குடோன்கள் மற்றும் கடைகளுக்கு சீல் :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 பட்டாசு குடோன்கள் மற்றும் பட்டாசு கடைகளுக்கு நேற்று முன்தினம் சீல் வைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் ஆணையின்படி, மாவட்டத்திலுள்ள அனைத்து பட்டாசு கடைகள், குடோன்கள் மற்றும் நாட்டு வெடிமருந்து குடோன்களில் வரு வாய் துறையினரால் ஆய்வு செய்திட அறிவுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, சங்கராபுரம்வட்டத்தில் மாவட்ட வருவாய்அலுவலர் தலைமையில் வெடி பொருள் விற்பனை நிலையங்களை தணிக்கை செய்தனர். இதில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் வெடிபொருட்கள் வைத்தி ருந்ததாலும், பாதுகாப்பு உபகர ணங்களான தண்ணீர் நிரம்பிய வாளி, மணல் நிரப்பப்பட்ட வாளி மற்றும் தீயணைப்பான் கருவி ஆகியவற்றை கடையின் முன்பாக தயார் நிலையில் வைத்திருக்கவில்லை. இதன் காரணத்தினால் விதிமீறல் கண்ட றியப்பட்ட கல்லை மெயின் ரோட்டில் உள்ள பாரதி க.பெ.குப்புசாமி மற்றும் செல்வகணபதி ஆகியோருக்கு சொந்தமான 2 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு அவர்களது உரிமம் ரத்து செய்யப்பட்டது.

அதேபோன்று கள்ளக்குறிச்சி வட்டம் மற்றும் நகரத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற தணிக்கையில் இது போன்ற விதிமீறல் கண்டறியப்பட்ட குளத்து மேட்டுத் தெருவில் உள்ள மணிகண்டன் மற்றும் ரவி ஆகியோருக்கு சொந்தமான 2 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்பட்டது.

மேலும் சின்னசேலம் வட்டத்தில் 2, உளுந்தூர்பேட்டை வட்டத்தில் 3 மற்றும் திருக்கோவிலூர் வட்டத்தில் 2 என படிவம் 20 உரிமம் கொண்ட நாட்டு வெடிகள் தயா ரிக்கும் குடோன்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்